×

சிம்மம்

29.2.2024 முதல் 6.3.2024 வரை

சாதகங்கள்: இதுவரை உங்கள் ஏழாம் இடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த தன லாபாதிபதி, புதன் வார மத்தியில் அஷ்டமத்தில் போகின்றார். அங்கு ராகுவோடு இணைவது சிறப்பான அமைப்பு அல்ல என்றாலும்கூட குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிப்பதால் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள் என்பதை தெரிவிக்கிறது. 6-ல் சஞ்சரிக்கக்கூடிய சுக்கிரனும் செவ்வாயும் உங்கள் ராசிக்கு நன்மையை செய்யும் அமைப்பில் இருக்கின்றார்கள். யோகக்காரன் செவ்வாயோடு இணைந்து இருப்பதால் பூமி வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புக்கள் கிடைக்கும்.

கவனம் தேவை: ராசிநாதன் நீசமடைந்திருப்பதும் ராகுவோடு இணைந்திருப்பதும் ராசியில் கேது இருப்பதும் சிலாக்கியமான அமைப்பு அல்ல. எதிலும் குழப்பமும் முடிவெடுப்பதில் தாமதமும் ஏற்படும் என்பதால் எதையும் யோசித்துச் செய்ய வேண்டும். நீண்ட பிரயாணங்கள் ஏற்படும் எதுவும் கடைசி நேரத்தில் மாற்றம் தருகின்ற அமைப்பில் மாறும் என்பதால் கவனம் தேவை. ஏழாம் இடத்தில் சூரியனும் சனியும் சஞ்சரிப்பதால் கணவன் அல்லது மனைவியின் உடல் பாதிப்பு ஏற்படலாம். அதிக அலைச்சலும் வெளியூர் பயணங்களும் ஏற்படும்.

பரிகாரம்:  சனிக் கிழமை தோறும் அனுமனை வணங்குங்கள். செவ்வாய்க்கிழமை வாராகி அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வரவும்.

Tags : Leo ,
× RELATED சிம்மம்