×

சிம்மம்

23.5.2024 முதல் 29.5.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் சூரியன் தொழில் ஸ்தானத்தில் குரு புதன் சுக்கிரனோடு இணைந்து இருப்பது நல்ல அமைப்பு. தொழில் விஸ்தரிப்பு முயற்சிகள் வெற்றி பெறும். லாபம் அதிகரிக்கும். வாடகைக் கட்டிடத்தில் உள்ளவர்கள் சொந்த இடத்திற்கு மாறும் வாய்ப்புண்டு. வீட்டிற்காக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருள்கள் வாங்கும் வாய்ப்பு இவ்வாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கௌரவமும் புகழும் கிடைக்கும். 10-ல் சுக்கிரன் பலத்தோடு இருப்பதால், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதோடு வருமானமும் அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பம் பத்திரிகை துறையில் உள்ளவர்களுக்கு வேலை உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். எழுத்து துறையில் ஈடுபட்டவர்கள் ஆதாயம் அடைவார்கள்.

கவனம் தேவை: பாக்கிய ஸ்தானத்தில் கேது இருப்பதால், எதையும் அளந்து பேசவும். ஏழாம் இடத்து சனி ராசியைப் பார்ப்பதால், மனைவியோடு பெரிய அளவில் வாக்கு வாதங்களை நிகழ்த்த வேண்டாம். கருத்து வேறு பாடுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. யாருக்கும் எந்த உத்தர வாதமும் அவசரப்பட்டு தர வேண்டாம். இடுப்புக்கு கீழ் உள்ள பாகங்களில் பிரச்னைகள் ஏற்படலாம்.

பரிகாரம்: பிரதோஷ நேரத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். பசுக்களுக்கு உணவளியுங்கள். பாரம் குறையும். சூரியனை வழிபட பிரகாசமான வாழ்க்கை கிடைக்கும்.

Tags : Leo ,
× RELATED சிம்மம்