×

சிம்மம்

30.5.2024 முதல் 5.6.2024 வரை

சாதகங்கள்: உங்கள் ராசிக்கு தன லாபஸ்தானங்களுக்கு அதிபதியான புதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால், தொழில் வெற்றிகரமாக நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு தரும் விதத்தில் பணிகள் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாகும். அஷ்டமத்தில் சஞ்சரித்த செவ்வாய் ராகுவிடமிருந்து விலகி மேஷத்தில் சொந்த ராசியில் சஞ்சரிக்கும் காலம் யோக பலன்களைத் தரும். எதைச் செய்ய நினைத்தாலும் அது வெற்றிகரமாக முடியும். எழுத்து துறையில் ஈடுபட்டவர்கள் ஆதாயம் அடைவார்கள்.

கவனம் தேவை: ஏழாம் இடத்தில் சனி இருப்பதும், பத்தாம் இடத்தில் குரு அமர்ந்திருப்பதும் சில சிரமங்களைத்தரத்தான் செய்யும். மனைவியின் ஆரோக்கியத்தில் அல்லது கணவனின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சின்ன சின்ன காரியத்திற்கு பெரிய முயற்சிகள் தேவைப்படும். வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்பதால், தேவையற்ற பேச்சுக்கள் குடும்ப அமைதியைக் குறைக்கலாம். கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 31.5.2024 இரவு 11.11 முதல் 3.6.2024 காலை 1.40 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: பிரதோஷ நேரத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். பசுக்களுக்கு உணவளியுங்கள். பாரம் குறையும். சூரியனை வழிபட, பிரகாசமான வாழ்க்கை கிடைக்கும்.

 

 

Tags : Leo ,
× RELATED சிம்மம்