×

சிம்மம்

26.9.2024 முதல் 2.10.2024 வரை

சாதகங்கள்: மூன்றாம் இடத்தில் உள்ள சுக்கிரனும் இரண்டாம் இடத்தில் உள்ள புதனும் 11ஆம் இடத்தில் உள்ள செவ்வாயும் உங்களுக்குச் சாதகமான நிலையில் இருப்பதால், நீங்கள் கவலை இல்லாமல் இருக்கலாம். சூரியனும் புதனும் இணைந்திருக்கின்றார்கள். வரவு இருந்தாலும் வரவுக்கேற்ற செலவும் உண்டு. கலைத்துறையினர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் உண்டு. ராசிக்குரிய சூரியன் புதனுடன் சேர்ந்து புத ஆதித்ய யோகம் ஏற்படுகின்றது. காரியங்களில் வெற்றி வாய்ப்புத் தரும். புதிய வீடு கட்டும் யோகம் சிலருக்கு உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

கவனம் தேவை: எட்டாம் இடத்தில் ராகு இருக்கின்றார். ஏழாம் இடத்தில் சனி இருக்கின்றார். சனி ராசியைப் பார்க்கின்றார். வண்டி வாகனங்களில் போகும் பொழுது மிக மிக எச்சரிக்கையோடு நடந்து கொள்ளவும். மருத்துவச் செலவுகள் இவ்வாரம் சற்று அதிகரிக்கவே செய்யும்.

பரிகாரம்: கண்டச் சனி நடப்பதால், அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது ஒரு உதவி செய்யுங்கள்.

 

 

 

 

 

 

Tags : Leo ,
× RELATED சிம்மம்