×

சிம்மம்

6.6.2024 முதல் 12.6.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் சூரியன் பலம் பெற்று தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அவரோடு குரு, சுக்கிரன், புதன் இணைந்து இருக்கின்றார்கள். தேவைக்கேற்ற வருமானம் வந்துவிடும். கடினமான உழைப்பு இருந்தாலும்கூட அதனால் கிடைக்கும் பலன் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும் வகையில் இருக்கும். பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் புதன், வார இறுதியில் லாபஸ்தானத்திற்கு வருகின்றார். அங்கு அவர் ஆட்சி பெறுகின்றார். அப்பொழுது உங்களுடைய சிரமங்கள் இன்னும் குறைய ஆரம்பிக்கும். உற்றார் உறவினர்களிடம் நன்மதிப்பு கூடும். வெளிநாட்டிலிருந்து சகாயமான தகவல் வந்து சேரும். எழுத்து துறையில் ஈடுபட்டவர்கள் ஆதாயம் அடைவார்கள்.

கவனம் தேவை: அஷ்டம ராசியில் ராகுவும் பாக்ய ஸ்தானத்தில் செவ்வாயும் இருக்கின்றார்கள். சனி பகவானும் களஸ்திரத்தில் இருக்கின்றார். மனைவி அல்லது கணவனின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்து உங்கள் விரய ராசியைப் பார்வையிடுவதால், மூத்த சகோதரர்களால் தேவையற்ற செலவுகள் உண்டு. கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால், கவனம் தேவை.

பரிகாரம்: பிரதோஷ நேரத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். பசுக்களுக்கு உணவளியுங்கள். பாரம் குறையும். சூரியனை வழிபட, பிரகாசமான வாழ்க்கை கிடைக்கும்.

 

 

 

 

 

 

Tags : Leo ,
× RELATED சிம்மம்