- கஞ்சி வடக்கு மாவட்டம் திமுகா
- காஞ்சிபுரம்
- வடக்கு மாவட்டம்
- திமுகா அவசர பணிக்குழு உறுப்பினர்களின்
- கார்த்திக் அரண்மனை மண்டபம்
- குணராத்தூர் -மங்காடு சாலை சிக்கரைபுரம்
- துரைசாமி
- மாவட்ட பிரதி செயலாளர்கள்
- ஈ கருணாநிதி எம்எல்ஏ
- கஞ்சி வடக்கு மாவட்டம் திமுகா
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் குன்றத்தூர் -மாங்காடு சாலை சிக்கராயபுரம் அருகில் உள்ள கார்த்திக் பேலஸ் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் த.துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் இ.கருணாநிதி எம்எல்ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, து.மூர்த்தி மற்றும் மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தலைமை தீர்மானக்குழு செயலாளர் மீ.அ.வைதியலிங்கம், தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், ராகுல்காந்தி, ரத்னா லோகேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வீ.தமிழ்மணி, ஆர்.டி.அரசு, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சி.அன்புச்செழியன், க.அன்புச்செல்வன், ஆதிமாறன், பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், வே.கருணாநிதி, இ.ஜோசப் அண்ணாதுரை, த.ஜெயக்குமார், பெருங்களத்தூர் எஸ்.சேகர், எஸ்.இந்திரன், டி.காமராஜ், மாடம்பாக்கம் நடராஜன், ஏ.கே.கருணாகரன், இ.எஸ்.பெர்னாட், செம்பாக்கம் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி, பையனூர் எம்.சேகர், ஏ.வந்தேமாதரம், மூவரசம்பட்டு ரவி, ஆப்பூர் பி.சந்தானம், எம்.டி.லோகநாதன், நகரச் செயலாளர்கள் டி.பாபு, ஜெ.சண்முகம், எஸ்.ஜபருல்லா, கோ.சத்தியமூர்த்தி, எம்.கே.டி.கார்த்திக், பேரூர் செயலாளர்கள் மு.தேவராஜ், ஜி.டி.யுவராஜ், ஆர்.சதீஷ்குமார், புனித பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்புமக்களும் மனம் மகிழ்ந்து பாராட்டுகின்ற வகையில் திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்ற வரலாற்று சாதனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ளார். முதல்வரின் 72வது பிறந்த நாளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் பட்டி – தொட்டியெங்கும் சிறப்பான வகையில் வருகிற மார்ச் மாதம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடவேண்டும்.
முதல்வர் பிறந்த நாளான 1.3.2025 காஞ்சி வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியம் – பகுதி – நகர – பேரூர்களில் உள்ள அனைத்து கிளைக்கழகங்களிலும் கொடி தோரணங்கள், ஒலிபெருக்கி கட்டி, திமுக கொடியேற்றி, இனிப்பு வழங்குவது, மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு, உடைகளை வழங்குவது, 4 ஆண்டு கால திராவிட மாடல் சாதனைகளை நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில் மார்ச் மாதம் முழுவதும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் பகுதி – நகரம் – ஒன்றியம்-பேரூர் சார்பிலும் மற்றும் மாவட்ட அணிகள் சார்பிலும் தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, ஏழை – எளியவர்கள் பயன்பெறுகின்ற வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, மருத்துவ முகாம், ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்வது, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டி நடத்தி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்குவது, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மார்ச் 1ம்தேதி அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் அணிவிப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
The post முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1ம் தேதி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு: காஞ்சி வடக்கு மாவட்ட திமுக முடிவு appeared first on Dinakaran.
