- துணைத் தேர்தல் ஆணையர்கள்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- மாவட்ட தேர்தல் அலுவலர்கள்
- சென்னை
- இந்தியா
- மனிஷ் கார்க்
- பன்வர் பிரகாஷ்
- பவன் குமார் சர்மா
- சஞ்சய்குமார்
- ஆஷிஷ் கோயல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
* போலீஸ் உயர் அதிகாரிகளையும் சந்திக்க திட்டம்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய துணைத்தேர்தல் ஆணையர்கள் மணீஷ் கார்க், பன்வர் பிரகாஷ், பவன்குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல் அடங்கிய 7 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் சென்னை வந்தனர். பின்னர் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற தேர்தல் அதிகாரிகள் அங்குள்ள தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிந்து நேற்று மாலை இந்திய தேர்தல் உயர் அதிகாரிகள் சென்னை வந்தனர்.
நேற்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரிகள் இன்று சென்னையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட ஆட்சியர்கள்) காலை ஆலோசனை நடத்துகிறார்கள்.
பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள், வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரயில்வே, துணை ராணுவம், தபால்துறை, சிவில் விமான போக்குவரத்துறையில் உள்ள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, வருகிற 17ம் தேதி இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடுவது தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என சந்தேகிக்கப்படும் இடங்கள், வாக்குச்சாவடிகள், வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு எண்ணிக்கை ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்த கூட்டம் முடிந்ததும் தேர்தல் அதிகாரிகள் டெல்லி சென்று, தலைமை தேர்தல் ஆணையருடன் விவாதிப்பார்கள். இதை தொடர்ந்து விரைவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும் தமிழகம் வந்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துவார்.
அப்போது, தமிழகத்தில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்று அனைத்துக்கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையரிடம் தெரிவிப்பார்கள். தேர்தலுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் நிறைவுபெற்ற பிறகு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
