×

மதுரையில் தொடரும் அவலம் இரு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 

மதுரை, அக். 11: மதுரையில் நரிமேடு கேந்திர வித்யாலயா உள்பட நான்கு பள்ளிகளுக்கு கடந்த திங்கள்கிழமை வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலமாக மிரட்டல் வந்தது. சோதனையில் அது புரளி என தெரிந்தது. அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று மதுரையில் உள்ள 4 நட்சத்திர தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அக்.8ம் தேதி மதுரையில் உள்ள மூன்று தனியார் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலும் புரளி என்பது உறுதியானது. இந்நிலையில், மதுரை பேச்சிகுளம் பகுதியில் உள்ள பள்ளிக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இந்நிலையில் நேற்று 5வது முறையாக மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதனால் அப்பள்ளிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிப்பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக ஏராளமான பெற்றோர் பள்ளியின் முன்பாக குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் தொடரும் இந்த வெடிகுண்டு மிரட்டல், போலீசாரையும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் பெரும் அவதி மற்றும் அச்சத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

The post மதுரையில் தொடரும் அவலம் இரு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Narimedu Kendra Vidyalaya ,Gandhi Jayanti ,Dinakaran ,
× RELATED குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்து...