×

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் அதிரைப் பெருவிழா

 

லால்குடி, ஜன.14: திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆதிரைப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜன.4ம்தேதி தொடங்கிய அதிரைப் பெருவிழாவில் நாள்தோறும் இரவு சந்திரசேகர் நடன மண்டபம் எழுந்தருளல், திருநடனக் காட்சி மற்றும் மாணிக்கவாசகர் புறப்பாடு, ஆராதனைகள் நடந்தது. 12ம் தேதி இரவு சோமாஸ் கந்தர் புறப்பாடு மற்றும் நடராஜ பெருமான் சிவகாமி சுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அதிரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான நடராஜ பெருமான் ஆனந்த தரிசனம் நேற்று நடந்தது. நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து, நடராஜ பெருமான் திருநடன காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நித்யா, சிவாச்சாரியார் தேஜோவிடங்க, குருக்கள்கள் கார்த்திக் மகாதேவன், சிவா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் அதிரைப் பெருவிழா appeared first on Dinakaran.

Tags : Adhirai festival ,Lalgudi Saptarishiswarar Temple ,Lalgudi ,Margazhi ,Saptarishiswarar Temple ,Lalgudi, Trichy district ,Chandrashekar Dance Hall ,Thirunatanak… ,
× RELATED லால்குடியில் ₹1.82 கோடியில் பத்திர பதிவு அலுவலகம் கட்டும் பணிகள் தீவிரம்