மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. தனியார் ஒப்பந்ததாரரால் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனது கணவர் உயிரிழந்ததாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோண்டப்பட்ட குழிக்கு முன் எச்சரிக்கை பலகை போன்ற பாதுகாப்பு விஷயங்கள் பின்பற்றப்படவில்லை. மனுதாரர் குடும்பத்துக்கு ரூ.13.42 லட்சம் இழப்பீட்டை 4 வாரங்களுக்குள் வழங்கவும்,இழப்பீட்டுத் தொகையை 6% வட்டியுடன் 4 வாரத்துக்குள் வழங்க தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மேலும், இழப்பீட்டுத் தொகையை மனுதாரரும் அவரது மகனும் சரிபாதியாக பிரித்துக் கொள்ளவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
The post குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்து பலி: இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.