திருச்சி, ஜன.14: தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் வெளியூர்களுக்கு கூட்ட நெரிசல் இன்றி சுலபமாக சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் 1,858 ஆகும். இந்நிலையில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 2,092 ஆகும். எனவே பொங்கல் பண்டிகைக்கு வழக்கமான பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என சேர்த்து 3,950 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த பேருந்துகளின் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரி 12ம் தேதி நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 2,17,250 ஆகும். ஜனவரி 10ம் தேதி முதல் ஜன 12ம் தேதி இரவு 12 மணி வரை மொத்தமாக இயக்கப்படும் 11,463 பேருந்துகளில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் 6.40 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.