×

விற்பனைக்கு குவிந்த வாழைத்தார்கள் கீழக்குறிச்சி, குண்டூரை

 

திருச்சி, ஜன.14: திருவெறும்பூர் தாலுகா கீழக்குறிச்சி கிராமத்தின் 1 முதல் 4 வரையிலான வார்டுகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகாவில் உள்ளது கீழக்குறிச்சி கிராமம். இங்கு 1 முதல் 4 வரையிலான வார்டுகள் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளித்தனர். திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் குண்டூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் குண்டூர் ஊராட்சி எம்ஐஇடி பகுதியில் திரண்டு குண்டூரை மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது என்று கோசமிட்டனர். பின்பு போலீசார் சமரசம் செய்யவும் கலைந்து சென்றனர்.

The post விற்பனைக்கு குவிந்த வாழைத்தார்கள் கீழக்குறிச்சி, குண்டூரை appeared first on Dinakaran.

Tags : Khabakurichi, Guntur ,Trichchi ,Tarna ,Collector's Office ,Taluga Kalakurichi ,Trichy Municipality ,Trichy ,Thiruverampur Taluga ,Khabukurichi, Guntur ,
× RELATED திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள்...