விராலிமலை, ஜன.14: விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேற்று கொண்டாடினர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், பாலசுப்பிரமணியம்(கிஊ) ஊழியர்களுடன் இணைந்து விறகு அடுப்பில் பொங்கல் வைத்து பொங்கலோ..பொங்கல் என மகிழ்ச்சியுடன் கூக்குரலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இதில்,அலுவலக உதவியாளர் சங்கர்,சண்முகசுந்தரம், இளங்கோ, டேனியல் உள்ளிட்ட பலர் பங்கேற்று பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
The post விராலிமலை யூனியனில் சமத்துவ பொங்கல் வைத்து அலுவலர்கள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.