- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பயிற்சி
- திருவனம்
- ஒரத்தநாடு
- தோப்புவிடுதி, தஞ்சாவூர் மாவட்டம்
- தொழில் பயிற்சி மையம்
ஒரத்தநாடு, ஜன. 14: தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், தோப்புவிடுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பயிற்சியாளர் தங்கும் விடுதி ஆகியன ரூ. 6 கோடியே 63 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதனை, திங்கட்கிழமையன்று காணொளிக்காட்சி மூலம் அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தலைமை செயலர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவோணம் தோப்பு விடுதி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், தஞ்சை மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), என்.அசோக்குமார் (பேராவூரணி) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி, திருவோணம் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் சோம.கண்ணப்பன், முன்னாள் திருவோணம் ஒன்றியப் பெருந்தலைவர் செல்லம் சௌந்தர்ராஜன், மண்டல பயிற்சி இணை இயக்குநர் ஜான் போஸ்கோ ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி சிறப்பித்தனர். இதில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் அலிவலம் அ.மூர்த்தி, திமுக அவைத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், கிராம பிரமுகர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.லெட்சுமி காந்தன் நன்றி கூறினார்.
The post திருவோணத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.