- ஆருத்ரா
- பொன்னமராவதி
- சோழீஸ்வரர் கோவில்
- ஆருத்ரா தரிசனம்
- பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழேஸ்வரர்
- கோவில்
- மார்கழி திருவாதிரை
பொன்னமராவதி, ஜன.14: பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் மார்கழி திருவாதிரையையொட்டி ஆரூத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிவகாமி உடனாய நடராஜருக்கு 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலின் முற்றோதல் குழுவினர் திருவெம்பாவை பாடல்கள் பாடினர். வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளைச்சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு களி பிரசாதமாக வழங்கப்பட்டது. அதுபோல புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதர் கோயில், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆரூத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது.
The post பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் ஆரூத்ரா தரிசன வழிபாடு appeared first on Dinakaran.