- கட்டிமேடு ஊராட்சி
- திருத்துறைப்பூண்டி
- திருத்துறைப்பூண்டி
- திருவாரூர் மாவட்டம்
- டி.எம்.கே பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- ரவிச்சந்திரன்
- செல்வம்
- ஒன்றிய பொருளாளர்
- தமிழ்ஜோதி
- காட்டிமேடு
- ஆதிரங்கம் கூட்டுறவு…
திருத்துறைப்பூண்டி, ஜன. 14: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. திமுக ஊராட்சி அவைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வம், ஒன்றிய பொருளாளர் தமிழ்ஜோதி, கட்டிமேடு – ஆதிரங்கம் கூட்டுறவு சங்க செயலாளர் ஜெயப்பிரகாஷ், கிராம கூட்டுறவு அங்காடி தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். டாக்டர் ஆரிப் பொங்கல் பரிசுகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுத்து துவக்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு நீள கரும்பு, வேட்டி, புடவை வழங்கப்பட்டது. இதில் 887 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதில் திமுக நிர்வாகிகள் ரஹமத்துல்லா, ஏசுகுமார், அப்துல்ரகுமான், பாரி, யாசின் கலந்து கொண்டனர்.
The post பழமை மாறாமல் கொண்டாட்டம் துப்புரவு பணியாளர்களுக்கு பரிசு கட்டிமேடு ஊராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல் appeared first on Dinakaran.