×

இந்த டீலிங் பிடிச்சிருக்கு அண்ணாமலை ஹேப்பி

அதிமுக, பாஜ கூட்டணியில் கோவை வடக்கு தொகுதி பாஜவிற்கு ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிட பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசனும் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் தனது மேலிட செல்வாக்கை பயன்படுத்தி வானதி சீனிவாசன் தனது சீட்டை உறுதி செய்து கொண்டார். இதனால் அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்தார்.

இதனிடையே வானதி சீனிவாசனையும், அண்ணாமலையையும் அழைத்து பாஜ மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. கோவை வடக்கில் இருவருக்கும் இல்லாமல் புது முகத்திற்கு சீட் கொடுக்கலாம் என முதலில் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு வானதி உடன்படவில்லை என்றும் எம்எல்ஏ தான் என்று அடம் பிடித்துள்ளார்.

இதனால் அண்ணாமலையை சமாதானம் செய்யும் முயற்சியை முன்னெடுத்தனர். அப்போது அவரிடம் தேசிய பொது செயலாளர் பதவி தருவதாகவும், அதிமுக., பாஜ கூட்டணிக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படியும் கேட்டுள்ளனர். எப்படியும் வானதி சீனிவாசன் தோற்று விடுவார். ஆனால் நான் தேசிய பொறுப்பில் இருப்பேன் என நினைத்து, இந்த டீலிங் பிடிச்சிருக்கு என அண்ணாமலை சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tags : Annamalai Happy ,Goa ,Bajaj ,Adimuka ,Baja ,Bahia ,president ,Annamala ,Vanathi Sinivasan ,
× RELATED சொல்லிட்டாங்க…