×

ஹெலிகாப்டர் தாரேன்…அதுல போய் மாடு மேயுங்க… சீமான் லக…லக…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் லோகநாதனை ஆதரித்து, பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: மாடு மேய்ப்பதை ஏதோ கேவலம் என நினைத்து கொண்டிருக்கிறீர்கள். நபிகள் நாயகம் மாடு வைத்திருந்தார். பகவான் கிருஷ்ணர், ஏசு ஆகியோர் மாடு வைத்திருந்தனர். ஆ…ஊ….ன்னா அமெரிக்கா என சொல்கிறீர்களே. அமெரிக்கா காரேனே மாடு தான் மேய்த்து கொண்டுள்ளான்.

பிரேசில் நாட்டில் பல ஆயிரம் ஏக்கரில் மாட்டு பண்ணை வைத்து மேய்த்து வருகின்றனர். அதேபோல பெருந்துறையை நான் ஆக்கிவிடுவேன். எனக்கு ஓட்டு போட்டுரு… என்ன?. பிரேசில் நாட்டில் ஜீப்பில் மாடு மேய்க்கின்றனர். ஆஸ்திரேலியா நாட்டில் ஹெலிகாப்டரில் வெள்ளைக்காரன் மாடு மேய்க்கிறாங்க. அதுபோல உங்களுக்கு 2, 3 ஹெலிகாப்டர் தந்து விடுகிறேன். சீக்கிரம் பெருந்துறையில் பண்ணை ஆரம்பிக்கனும்னா விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போட்டுருங்க.

மாடு மேய்க்க குதிரை வேண்டுமானாலும் குதிரை தாரேன். ஹெலிகாப்டர் வேண்டுமானாலும் ஹெலிகாப்டர் தருகிறேன். இல்லை ஜீப்ல மாடு மேய்க்கிற என்றாலும் ஜீப் தருகிறேன். எதுல வேண்டுமானாலும் மேய்ங்க. தம்பி, பால் இருந்தா, நாட்டில் பசி இருக்காது. அது முழுமையான உணவு.

நாம் பிறந்த முதல் ஒரு வருடத்திற்கு தாய் பால் மட்டும் தான் குடித்தோம். இருப்பினும் கழிவு வந்தது எதனால். மற்ற திரவங்களை குடித்தால் கழிவு வராது. முழு புரதச்சத்து பாலில் உள்ளது. பால் மட்டும் என்னிடத்தில் இருந்தால், எந்நாடு பசியை மறந்து விடும். பால், மோர், தயிர் என எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் கொடுத்து பசி சொல்லை ஒழித்து விடுவேன். நான் ஏன் உங்களிடம் பொய் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Seeman ,Lokanathan ,Naam Tamilar Party ,Perundurai ,Erode district ,Chief Coordinator ,Prophet Muhammad ,
× RELATED சொல்லிட்டாங்க…