- கிருஷ்ணசாமி
- புதிய தமிழரசுக் கட்சி
- ஓட்டப்பிடாரம்
- தூத்துக்குடி மாவட்டம்
- ஷ்யாம்
- திருநெல்வேலி
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- தூத்துக்குடி விமான நிலையம்
புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் போட்டியிடுகிறார். அவரது மகன் ஷியாம் திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கிருஷ்ணசாமி நேற்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: எங்களை கூட்டணியில் சேர்க்கவில்லை என்ற கவலை இல்லை.
வலுவான கூட்டணி அமைய வேண்டும் என முயற்சி எடுத்தது உண்மைதான். ஆனால் கூட்டணிக்கு தலைமை தாங்கியவர்கள் தங்களுடைய கடமையை உணர்ந்து சரிவர பொறுப்புடன் செயல்படாத காரணத்தால் மெகா கூட்டணி அமைவதற்கு உண்டான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் புதிய தமிழகம் கட்சி யாரையும் நம்பி இல்லை. நாங்கள் மக்களோடு என்றும் தொடர்பில் இருக்கிறோம்.
மக்களோடு இணைந்து இருக்கிறோம் என்ற வகையில் 70 தொகுதியில் போட்டியிட இருக்கிறோம். நாங்கள் கூட்டணி சேர்ந்திருந்தால் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருந்தது. தற்போது 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இன்னும் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பாடுபடுவோம். எங்கள் வேட்பாளர்கள், வரும் 6ம் தேதி மதியம் 12 மணியில் இருந்து 3 மணிக்குள்ளாக வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்றார்.
