- கீழப்பழுவூர் ஆலந்துராயர் கோவில்
- பங்குனி உத்திர பெருவிழவை
- அரியலூர்
- அருந்தவநாயகி சமேத ஆலந்துராயர் கோவில்
- கீலப்பாழுவூர், அரியலூர் மாவட்டம்
- விநாயகர்
- பஞ்சமூர்த்தி
- வடை…
அரியலூர், ஏப்.1: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரிலுள்ள அருந்தவநாயகி சமேத ஆலந்துறையார் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் விநாயகர் புறப்பாடு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, வட விருட்சத்தில் சுவாமி புறப்பாடு, நாயன்மார்கள் புறப்பாடு, யானை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. மார்ச் 29ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் சுவாமி பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், அரியலூர், திருமானூர், மேலப்பழுவூர், கீழப்பழுவூர் சாத்தமங்கலம், கள்ளூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினரும், விழா குழுவினரும் செய்திருந்தனர்.
