- பட்டியில்
- சபை
- திருவாடானை
- தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் மன்ற சங்கம்
- பார் அசோசியேஷன்
- திருவதானா ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- முசித்ராஜ்குமார்
திருவாடானை, ஏப்.1: திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கக் கட்டிடத்தில், தமிழ்நாடு-பாண்டிச்சேரி பார் கவுன்சில் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முஸ்சித்ராஜ்குமார் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டு, அவரது நேரடி மேற்பார்வையில் தேர்தல் பணிகள் முறையாகத் தொடங்கின.
முன்னதாக, பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட சீல் வைக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப்பெட்டிகள், திருவாடானை சங்கத் தலைவர் சுரேஷ், மூத்த வழக்கறிஞர்கள் கண்ணன் மற்றும் தனபால் ஆகியோர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 49 வாக்குகளில் 47 வாக்குகள் செலுத்தப்பட்டன. இது சுமார் 96 சதவீத வாக்குப்பதிவாகும். வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிக்கு அதிகாரிகள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டு, பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
