×

திருப்பூர், வெள்ளகோவிலில் சூதாட்டம்-9 பேர் கைது

திருப்பூர், ஏப்.1: திருப்பூர், மங்கலம் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் மங்கலம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மங்கலம் அடுத்த சின்னையன் கோவில் பிரிவில் சிலர் கூட்டமாக அமர்ந்திருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முருகன் (46), ராஜேந்திரன் (46), சிம்சோன்ராஜ் (40) என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதையடுத்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம், சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

வெள்ளக்கோவில்: வெள்ளகோவில் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வெள்ளகோவில் மூலனூர் ரோடு ஆயிரம் வைசிய செட்டியார் மகால் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர் ராஜேஷ்குமார் (35), ரமேஷ் (25), கார்த்திக் (31), சிவராஜ் (27), ராம்குமார் (30), ராஜா (29) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : Vellakovil, Tirupur ,Tirupur ,Mangalam police station ,Mangalam police ,Chinnayan Temple ,Mangalam… ,
× RELATED 2 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது