×

சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

திருப்பூர், ஏப். 1: சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் நிலாய் பங்கர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு 10 தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது பார்வையாளர்கள் 4 பேர், செலவின பார்வையாளர்கள் 5 மற்றும் காவல் பார்வையாளர் 1 ஆகும்.

இதில் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு செலவின பார்வையாளராக நிலாய் பங்கர் நியமிக்கப்பட்டார். அவர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் செலவினம் தொடர்பான ஆவணங்கள் பார்வையிட்டார்.தொடர்ந்து வடக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான, சப் கலெக்டர் சிவப்பிரகாஷிடம் பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார்.

இதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தேர்தல் முடியும் வரை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வடக்கு தாசில்தார் கண்ணாமணி மற்றும் தேர்தல் துணை தாசில்தார் ராசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

Tags : Sub-Collector's Office ,Tiruppur ,Nilai Bangar ,
× RELATED 2 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது