×

வைகை அணை நீர்மட்டம் சரிவு

ஆண்டிபட்டி, ஏப். 1: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து மிகக் குறைவாக உள்ள நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 33.79 அடியாகக் குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 99 கன அடியாகவும், வெளியேற்றம் 77 கனஅடியாகவும் உள்ளது. நீர்இருப்பு – 541 மி.க.அடியாக உள்ளது.

 

Tags : Vaigai Dam ,Andipatti ,Madurai ,Dindigul ,Sivaganga ,Ramanathapuram ,
× RELATED பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி...