×

பறக்கும் படை சோதனையில் ரூ.60 ஆயிரம் பறிமுதல்

உத்தமபாளையம், ஏப். 1: உத்தமபாளையம் அருகே பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. உத்தமபாளையம்-கம்பம் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பால் வண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.60,000 பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் உடனடியாக கம்பம் தொகுதி தேர்தல் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான முகமது இப்ராகீமிடம் ஒப்படைக்கப்பட்டு, உரிய உத்தரவின் அடிப்படையில் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

Tags : Uttampalayam ,Election ,Squad ,Selvakumar ,Uttampalayam-Khampam ,
× RELATED பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி...