மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் நீதிபதிகள், “ஒவ்வொரு கார்த்திகையின் போதும் தீபம் ஏற்ற வேண்டும். மலை உச்சியில் தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் யாரும் தீபத்தூணில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்துடன் செல்லக் கூடாது. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.” இவ்வாறு தெரிவித்தனர்.
