×

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடம் தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: 2025ம் ஆண்டு தமிழகத்தில் 1476 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகமாக நடைபெறுவதற்கு, தமிழ்நாடு மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருப்பதும், திறமையான மருத்துவர்கள் இருப்பதும், மருத்துவக் கட்டமைப்புகள் மேம்பட்டு இருப்பதும் முக்கிய காரணங்களாகும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதற்கு அர்ப்பணிப்போடு செயல்படும் மருத்துவர்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Tags : Communist Party of India ,Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...