×

தென் ஆற்காடு மாவட்டங்களுக்கு குறி விஜயகாந்த் பார்முலாவை ‘டிக்’ அடித்த பிரேமலதா: நாளை நடக்கும் கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு

விழுப்புரம்: தமிழக அரசியலில் திரைத்துறையிலிருந்து வந்து தனக்கென ஓர் இடத்தை பிடித்து அரசியலில் இறங்கி எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெற்று மறைந்தவர் விஜயகாந்த். கடந்த 2005ம் ஆண்டு மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய அவர் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக விளங்கிய விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்தார்.

3வது முறையாக உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டு படுதோல்வியடைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தேமுதிகவில் விஜயகாந்த் மறைவுக்குப்பிறகு அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறி என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக விஜயகாந்துக்கு தலைமை பதவி ஏற்ற பிரமேலதா தலைமையில் அக்கட்சிக்கு சந்தித்த அனைத்து தேர்தலிலும் படுதோல்வியும், வாக்கு வங்கியும் பலமடங்கு சரிவும் கண்டது.

அப்போது சரியாக கூட்டணி முடிவை எடுக்கவில்லை, கட்சியினர் விருப்பத்துக்கு மாறாக கூட்டணி அமைத்ததாக பிரேமலதா மீது நிர்வாகிகள், தொண்டர்கள் குற்றம் சாட்டினர். இதன் அதிருப்தியால் அக்கட்சியில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்று கட்சிக்கு தாவினார்கள். இந்நிலையில், தமிழகத்தில் தேமுதிக தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க வரவுள்ள சட்டமன்ற தேர்தலை கையில் எடுத்துள்ளார் பிரேமலதா.

அதிமுக, பாஜ மீது அதிருப்தியில் உள்ள பிரேமலதா வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பிரேமலதா இணைய விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். நாளை கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என்று பிரேமலதா கூறி உள்ளார்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் தேமுதிக மாநாடு நடத்துவதன் பின்னணியில் அக்கட்சியில் சென்டிமென்டும், செல்வாக்கும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘விஜயகாந்த் தேர்தல் களத்திற்கு வந்தது தென்னாற்காடு மாவட்டத்தில்தான்.

சட்டமன்ற தேர்தலில் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில்தான். அடுத்த தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது திருக்கோவிலூர், பண்ருட்டி தொகுதியிலும் தேமுதிக வெற்றி பெற்று கணிசமான வாக்கு வங்கி உள்ள மாவட்டமாக இந்த தென்னாற்காடு விளங்கியது.

மேலும், மக்களவை தேர்தலில் கள்ளக்குறிச்சியில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். அதேபோல் கடலூர் மக்களவை தொகுதியிலும் கூட்டணியில் போட்டியிட்டது. இதனால் இந்த தென்னாற்காடு மாவட்டம் தேமுதிகவுக்கு கைெகாடுக்கும் என்ற முயற்சியில் விஜயகாந்த் தேர்தல் சென்டிமென்ட் பார்முலாவை, தற்போது பிரேமலதாவும் கையில் எடுத்து இந்த ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் தேமுதிக மாநாட்டை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் இந்த பகுதியில் பாமகவும் ஓரளவுக்கு செல்வாக்காக இருந்து வந்தது. தற்போது தந்தை, மகனிடையே ஏற்பட்டுள்ள மோதலால் கட்சி இரண்டாக உடைந்துள்ளதால், இரு அணிகளில் சிதறும் வாக்குகளையும் தங்களுக்கு சாதகமாக்கி பயன்படுத்தவும் முயற்சித்துள்ளனர்’ என்றனர்.

Tags : Premalatha ,Vijayakanth ,South Arcot ,Cuddalore ,Villupuram ,Tamil Nadu ,Madurai ,
× RELATED திருமழிசை -திருவள்ளூர்...