- மடபுரம்
- அஜித் குமார்
- ஐகோர்ட் கிளை
- மதுரை
- நகை
- கண்ணன்
- ராஜா
- ஆனந்த்
- பிரபு
- சங்கரமணிக்கந்தன்
- மதுரை மத்திய சிறைச்சாலை
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார். நகை மாயமான புகாரில், தனிப்படை போலீசாரின் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அஜித்குமார் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ போலீசார், அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவக்குமார், ஏட்டு இளையராஜா உள்ளிட்ட 4 பேரையும் வழக்கில் சேர்த்தனர். இந்த வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் முகைதீன் பாட்சா ஆஜராகி, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றார். அப்போது நீதிபதி, ‘‘ஏன் இன்னும் டிஎஸ்பியை கைது செய்யவில்லை’’ என்றார். அப்போது மனுதாரர் தரப்பில், முன் ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
