சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது ஏன் என படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: எங்கள் மதிப்பிற்குரிய பங்குதாரர்கள் மற்றும் ரசிகர்களுடன் இந்தச் செய்தியை மிகுந்த மனவருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ஜனவரி 9ம் தேதி வெளியாகவிருந்த ஜனநாயகன் திரைப்படம், எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் மீதான உங்களின் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும், உணர்வுகளையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம். எனவே, இந்த முடிவை எடுப்பது எங்கள் யாருக்கும் எளிதான ஒன்றாக இருக்கவில்லை.
புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்களின் பொறுமையையும் தொடர்ந்த அன்பையும் பணிவுடன் வேண்டுகிறோம். உங்களின் அசைக்க முடியாத ஆதரவே எங்களின் மிகப்பெரிய பலம். அது ஜன நாயகன் குழுவினர் அனைவருக்கும் மிக முக்கியமானது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
