×

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்சா? பரபரப்பு பேட்டி

அவனியாபுரம்: சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சிடம், கூட்டணி நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், பதில் கூறாமல் மவுனமாக அனைவரையும் பார்த்தார். தொடர்ந்து பேசிய அவர், உங்களுடன் அமமுக, தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறதே என கேள்விக்கு ‘‘எனக்கு தெரியவில்லை, மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம் நிபந்தனை அற்ற ஆதரவு’’ என்று கூறினார். கூட்டணி பற்றி பேச டெல்லி செல்ல வாய்ப்புள்ளதா?, எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் குறித்து கேட்டனர். அதற்கு சிரித்துவிட்டு, ‘‘நல்லவேளை அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதா என்று கேட்காமல் விட்டீர்களே. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது உலக அதிசயமா’’ என்றார்.

Tags : OPS ,AIADMK alliance ,Avaniyapuram ,Chief Minister ,Madurai ,Chennai ,AMMK ,DMDK… ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...