தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகலா?: ஓ.பன்னீர்செல்வம் பதில்

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகலா என்பது குறித்து ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் கூட்டணி குறித்து இன்று ஓ.பி.எஸ். அறிவிக்கிறார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறேன் என தெரிவித்தார். மோடி, அமித் ஷா ஆகியோர் ஓ.பி.எஸ்.ஸை தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகலா?: ஓ.பன்னீர்செல்வம் பதில் appeared first on Dinakaran.

Related Stories: