சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலய வளாகத்தில் நேற்று அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கேக் வெட்டி கிறிஸ்தவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் ெதரிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக, மக்களின் நலனுக்காக பாடுபடுகின்ற இயக்கம். கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில், கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்ற ஒப்பந்தம் மட்டுமே, கொள்கை என்பது எங்களது கட்சியின் உயிர் மூச்சு போன்றது. இவ்வாறு அவர் பேசினார்.
பாஜவுடன் அதிமுக கூட்டணி ஏற்படுத்தியதால், தற்போது புதிய விளக்கத்தை எடப்பாடி கொடுத்திருக்கிறார் என்கின்றனர் விழாவில் கலந்து கொண்டவர்கள்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
எம்ஜிஆர் என்கின்ற முகமூடியை போட்டு வந்தால்தான் மக்களை சந்திக்க முடியும், முகமூடி போட்டு வந்தா தான் ஓட்டு கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை விஜய்க்கு உள்ளது. அப்படி என்றால் உங்களது தனித்தன்மை இல்லாமல் போய்விட்டது. எம்ஜிஆர் முகமூடியும் சரி, ஜெயலலிதா முகமூடியும் சரி ஒருபோதும் அதிமுகவுக்கு ஓட்டு போட்ட கைகள் வேற எந்த கட்சிக்கும் ஓட்டு போடாது, இதுதான் உண்மை. அவர்களுக்கு என்று ஒரு தத்துவம் கிடையாது. களத்தில் இல்லாத கட்சி என்று விஜய் எங்களை சொல்லவில்லை. அவர் மனதில் இணைத்து சொல்லி இருந்தால் முளைத்து மூணு இலை விடாதவர்கள் அவர்கள், ஆலமர நிழல் தருகின்ற இயக்கம் அதிமுக, ஊர் குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகாது. இவ்வாறு அவர் கூறினார்.
