மீனம்பாக்கம்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் எம்பியுமான நடிகர் கமல்ஹாசன், டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார்.
அப்போது, அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காந்தியாரின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் தற்போது இல்லை. தமிழக அரசின் மீது சுமை கூடுவதை தான், நாம் இதில் கவனிக்க வேண்டும். ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்ட உதவி, இவையெல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். பாயிண்டை விட்டுவிட்டு, வேறு இடத்தில் விளையாட கூடாது என்பதுதான் எனது கருத்து. பிரதமர் உள்ளிட்ட பாஜ தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு பிரசாரத்திற்கு வருவதால், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக கண்டிப்பாக தேர்தல் பிரசாரம் செய்வேன்.
