லண்டனில் கார்ல் மார்க்ஸ் சிலைக்கு அமைச்சர் சா.மு.நாசர் மரியாதை


சென்னை: முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும் துணை முதலமைச்சரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படியும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் லண்டன் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், லண்டனில் நடைபெற்ற அயலக தமிழர் சாதனை விருது 2025 வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி விழா பேசினார்.

இதையடுத்து லண்டன் ஹைகேட்டில் அமைந்துள்ள கார்ல் மார்க்ஸின் கல்லறை அமைந்திருக்கும் இடத்திற்கு சென்று அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக அயலக அணி அமைப்பாளர் செந்தில், மாநில சிறுபான்மையினர் அணி இணை செயலாளர் ஜெரால்டு இருந்தனர்.

The post லண்டனில் கார்ல் மார்க்ஸ் சிலைக்கு அமைச்சர் சா.மு.நாசர் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: