கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று மதுரையில் இருந்து புறப்படுகிறது. நாகர்கோவில் – தாம்பரம் விரைவு ரயில் கோவில்பட்டியில் இருந்து இன்று புறப்படும். நாகர்கோவில் கன்னியாகுமரி, நாகர்கோவில் -நெல்லை, கொச்சுவேலி – கோரக்பூர் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் விருதுநகரில் இருந்து இன்று புறப்படும். கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும். கன்னியாகுமரி – புனலூர் விரைவு ரயில் இன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
The post நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் விருதுநகரில் இருந்து இன்று புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.