மோடி ஒரு சுயநலம் மிக்க தலைவராக செயல்படுகிறார் : அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சனம்

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி ஒரு சுயநலம் மிக்க தலைவராக செயல்படுகிறார் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார். அரசு செலவில் தமிழ்நாடு வரும் பிரதமர் ஈனுலையை பார்வையிட்டு, கட்சி தேர்தல் கூட்டத்திலும் பங்கேற்கிறார் என்று கூறிய அவர், பிரதமர் மோடி தன்னை உருவாக்கிய வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரை மறந்து விட்டதாகவும் வாஜ்பாய், அத்வானியை மறந்துவிட்டு, எங்கள் கட்சியின் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி பேசி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் என்றும் முனுசாமி குறிப்பிட்டுள்ளார்.

The post மோடி ஒரு சுயநலம் மிக்க தலைவராக செயல்படுகிறார் : அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: