நேற்று காலை கிரானைட் கல்லை ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் புதுச்சேரி நோக்கி சாலையில் திரும்பும்போது பாரம் தாங்காமல் சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
மினி வேனும் சேதமானது. இந்த விபத்தால் புதுச்சேரி – கடலூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான மினி லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்து குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரானைட் கல் ஏற்றிச்சென்ற மினி லாரி தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post தடுப்பு கட்டையில் மினி வேன் மோதி விபத்து appeared first on Dinakaran.
