குவைத்தில் பலியானோர் உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி : சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் தமிழர்களின் உடல்!

கொச்சி : குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் கொச்சி கொண்டுவரப்பட்டன. இதில், கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், ஆந்திராவைச் சேர்ந்த மூவர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரின் உடல்கள் கொச்சியில் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சியுள்ள உடல்களை டெல்லி விமான நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து அவர்களின் ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 31 பேர் உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினர்.

ஒன்றிய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங், சுரேஷ்கோபி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். கொச்சியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் தனித்தனி ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கொச்சி சென்றுள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடல்களை அனுப்ப ஏற்பாடு செய்தார். அதன்படி, ஒவ்வொரு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், அவர்கள் செல்ல வேண்டிய வழித்தடம் – ரூட் மேப் விளக்கப்பட்டு உள்ளது. உறுதுணையாக காவல்துறையினரும் செல்கின்றனர்.

The post குவைத்தில் பலியானோர் உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி : சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் தமிழர்களின் உடல்! appeared first on Dinakaran.

Related Stories: