ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் வெளியே வந்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். ராமநாதபுரத்தில் 2 மாதத்தில் 3 விஏஓக்கள் கைது.. கையெழுத்து கேட்டு வருவோரால் மாறும் தலையெழுத்து! காங்கிரஸ் தலைமையிலனா இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் அம்மாநில முதல்வராக இருந்தார். ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என புகார் எழுந்தது. அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அதிரடியாக கைது செய்தது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட உள்ள அறிந்து உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமாக செய்தார். அதன்பின்னரே அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. கடந்த ஆறு மாதங்களாக ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த கையோடு, தான் வகித்த முதல்வர் பதவியை கட்சியின் மூத்த தலைவா் சாம்பாய் சோரன் அளித்துவிட்டு சென்றார்.இதையடுத்து ஜாா்க்கண்ட் புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்றார். சில மாதங்களுக்குப் பிறகு ஜார்க்கண்ட் நீதிமன்றம் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் பிணையில் வெளியே வந்தார். இந்த நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார் இதற்காக முதல்வர் சாம்பாய் சோரன் வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களின் குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் ஹேமந்த் சோரன். இதனிடையே சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் இன்று மாலை அளித்தார். அப்போது சாம்பாய் சோரனுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது ஹேமந்த் சோரன் தன்னை ஆட்சியமைக்க அழைக்கும் படி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து உரிமை கோரினார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் விரைவில் ஹேமந்த் சோரனை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றால், கடந்த 2000 நவம்பரில் பிகாரில் இருந்து பிரிக்கப்பட்ட ஜார்க்கண்டின் 13வது முதல்வராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: