உலகக்கோப்பையுடன் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள்

பார்படாஸ்: கரீபியன் தீவான பார்படாஸில் இருந்து விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் தாயகம் புறப்பட்டனர். புயல் காரணமாக பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் புறப்படுவது தாமதமானது. டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியிருந்தது.

வெஸ்ட்இண்டீசில் நடந்த 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் கடந்த சனிக்கிழமை நடந்த இறுதி போட்டியில் இந்திய அணி, தென்ஆப்ரிக்காவை 7 ரன்வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுக்கு பின் டி.20 உலக கோப்பையை வென்ற இந்தியஅணி நாடு திரும்புவதில் சிக்கல் எழுந்தது.

பார்படாசை தாக்கிய புயல் காரணமாக அங்கு கடந்த 3 நாட்களாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்தியா அணியினர் ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் சென்று பின்னர் அங்கிருந்து துபாய் வழியாக மும்பை திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் புயல் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதால் 3 நாட்களாக வீரர்கள் ஓட்டலிலேயே முடங்கினர். தற்போது அங்கு நிலைமை சீராக்கியதையடுத்து இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பினர். பார்படாசில் இருந்து தனி விமானத்தில் இந்திய அணியினர் புறப்பட்டனர். நாளை காலை டெல்லியை வந்தடைவார்கள் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியுடன் பிசிசிஐ தலைவர் ரோஜர்பின்னி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்டோரும் வருகின்றனர். சாம்பியன் கோப்பையுடன் நாடு திரும்பும் இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்புக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

The post உலகக்கோப்பையுடன் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: