மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடந்தது. இதனால் நேற்று பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையே பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் இன்னும் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும் என்றும், முடிந்தால் காப்பாற்றி கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

உடனே சம்பவம் குறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் நேற்று நள்ளிரவு சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து பல்கலைக்கழக மின்னஞ்சலுக்கு வெடி குண்டு மிட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியை வைத்து கோட்டூர்புரம் போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அண்ணாபல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: