கடந்த 41 ஆண்டுகளில், ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்று கூறப்படுகிறது. மோடி தனது பயணத்தின்போது, இரு நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுகிறார். கடந்த 2019ல் ரஷ்யாவில் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். 5 ஆண்டுகளுக்கு பின் இப்போது ரஷ்யாவுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார். உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதிலும், அந்நாட்டுடன் இந்தியா வலுவான நட்புறவை பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார் appeared first on Dinakaran.