பசுமை சூழல், நீர்வீழ்ச்சிகள், வன விலங்குகளின் தடங்கள் ஆகியவற்றை அனுபவிக்க இந்த பாதை சிறந்த வாய்ப்பாக இருந்து வருகிறது. மலையேற்றத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் டிரெக்கிங் தமிழ்நாடு திட்டத்தில் முன்பதிவு செய்து இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இதே போல் முன்பதிவு செய்து மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு வந்தவர்களை பழங்குடியின பெண்கள் அடங்கிய வழிகாட்டு குழுவினர் காடு, மலை என அனைத்திற்கும் அழைத்து சென்று விளக்கினர்.
அந்த குழுவில் உள்ள ஆண்கள் முன்செல்ல அவர்களை பின் தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் செல்கின்றனர். டிரெக்கிங் தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தங்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக பழங்குடியின பெண்கள் தெரிவித்தனர். காடுகள், வனவிலங்குகள், பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை குறித்து தெரிந்து கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்த மலையேற்ற பயிற்சி இருந்ததாக டிரெக்கிங் வந்தவர்கள் கூறினர். டிரெக்கிங் திரில்லிங்கான அனுபவத்தை தந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு நபருக்கு ரூ.900 என்பது பெரிய விஷயமாக இல்லாமல் இயற்கையோடு சிறிது நேரம் பொழுதை கழித்தது மகிழ்ச்சியை அளித்ததாக டிரெக்கிங்கில் ஈடுபட்டவர்கள் கூறினர். 9780எக்டர் பரப்பளவில் பரவியுள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு, காட்டு பன்றி உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பல்வேறு அறிய பறவைகள் மற்றும் பூச்சிகளின் வாழ்விடமாக உள்ளது என்று வழிகாட்டி குழுவை சேர்ந்த பெண்கள் தெரிவித்தனர்.
The post மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நடைபெறும் மலையேற்றப் பயிற்சி: டிரெக்கிங் தமிழ்நாடு திட்டத்தில் முன்பதிவு appeared first on Dinakaran.
