தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருப்ேபாரூர்: மேலக்கோட்டையூரில் இந்திய தகவல் தொழில் நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் மற்றும் தேசிய எரிசக்தி பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை அருகே மேலக்கோட்டையூரில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் (ஐஐஐடிடிஎம்) காஞ்சிபுரம் மற்றும் தேசிய எரிசக்தி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே சைபர் பாதுகாப்பு மற்றும் நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் நுட்பங்கள் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான விழா மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் தேசிய எரிசக்தி பயிற்சி நிறுவன முதன்மை இயக்குநர் மஞ்சுமாம் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இந்த 2 நிறுவனங்களும் மேற்கூறிய துறைகளில் குறுகிய பயிற்சி வகுப்புகள் வழங்கும் மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடும். மேலும் இந்த ஒப்பந்ததத்தின் மூலம் பல்வேறு தொழில்நுட்ப களங்களில் உள்ள நிபுணர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட குறுகிய கால பயிற்சி வகுப்புகளை வழங்க முடியும்.

மேலும், நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் நிறுவனங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்தும் என்றும் எம்.வி.கார்த்திகேயன் மற்றும் மஞ்சுமாம் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர். சைபர் செக்யூரிட்டியில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் மற்றும் நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் நுட்பங்கள் ஆகிய துறைகளில் கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளுடன் உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: