மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் இன்று ஆய்வு

சென்னை: மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் இன்றும், நாளையும் ஆய்வு செய்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு தயாராகி வருகிறது.

அந்த வகையில் மதுரை திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.11,368 கோடியிலும், கோவை அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.10,740 கோடியிலும் விரிவான திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்த உடன் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் கோவை மற்றும் மதுரையில் அமைய உள்ள முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஆசிய முதலீட்டு வங்கி கடனாக வழங்க உள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்டங்களை ஆய்வு செய்ய ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நேற்று சென்னை வந்தனர். இதையடுத்து சென்னை வந்துள்ள பிரதிநிதிகள் இன்று மற்றும் நாளை ஆய்வு செய்கின்றனர்.

The post மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் இன்று ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: