ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், பிளம்பர், பிட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

சென்னை: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக அலுவலர் வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், ஸ்டீல் பிட்டர், ஹெல்பர் உள்ளிட்ட பணிகளுக்கான தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவத்துடன் 40 வயதிற்கு உட்பட்ட தச்சர், ஸ்டீல் பிட்டர், ஹெல்பர் ஆகிய பணிக்கு ரூ.27,600 ஊதியமாகவும் கட்டுமான பணியாளர், அலுமினியம் பேப்ரிகேட்டர், டக்ட் மேன் ஆகிய பணிக்கு ரூ.29,900ம், மரச்சாமான் சாயம் பூசுபவர், மரச்சாமான் தச்சர் ஆகிய பணிக்கு ரூ.31,050ம் மற்றும் பிளம்பர் மற்றும் ஏசி டெக்னீஷியன் ஆகிய பணிக்கு ரூ.34,500 ஊதியமாக வழங்கப்படும் விசா மற்றும் இருப்பிடம் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

எனவே,விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதியலாம். மேலும், ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சுய விவர விண்ணப்ப படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலை ஜூலை 10ம் தேதிக்குள் அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் 044-22505886/22502267, வாட்ஸ் அப் எண் 95662 39685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

 

The post ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், பிளம்பர், பிட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: