தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 6ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் மாறுபாடு காரணமாகவும், தமிழ்நாட்டின் சில இடங்களில் மழை நீடித்து வருகிறது.

அதிகபட்சமாக நீலகிரி, நாமக்கல், கோவை, மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 6ம் தேதி வரை நீடிக்கும்.

மேலும் இன்று முதல் 6ம் தேதி வரையில் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

The post தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: