மணிப்பூர் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் மகளிர் ஆணைய தலைவிக்கு திடீர் அனுமதி மறுப்பு: மாநில அரசு யூ-டர்ன் அடித்துள்ளதாக புகார்

புதுடெல்லி: மணிப்பூர் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், தனக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டதாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்:
‘மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக, மாநில அரசிடம் அனுமதி கேட்டிருந்தேன். அவர்களும் மணிப்பூர் வரலாம் என்று சொன்னார்கள். ஆனால் மணிப்பூர் அரசு ‘யூ-டர்ன்’ எடுத்துள்ளது. நான் மணிப்பூர் செல்ல அனுமதி மறுத்துவிட்டது. மாநில அரசின் அறிவிப்பானது, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நான் ஏன் சந்திக்க கூடாது? அவர்களை சந்திப்பதற்காக அவர்களின் அனுமதியையும் பெற்றுவிட்ேடன்.

மணிப்பூர் செல்வதற்காக பயண டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துவிட்டேன். அப்படியிருந்தும் என்னை ஏன் தடுக்க முயற்சிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஸ்வாதி மாலிவால் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு இன்று செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் மாநில அரசு அவரது வருகைக்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்துள்ளது. முன்னதாக மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கும் ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் மணிப்பூர் போலீஸ் டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மணிப்பூர் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் மகளிர் ஆணைய தலைவிக்கு திடீர் அனுமதி மறுப்பு: மாநில அரசு யூ-டர்ன் அடித்துள்ளதாக புகார் appeared first on Dinakaran.

Related Stories: