லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த உத்தரபிரதேசத்தில் தோற்கடிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் புது பார்முலா

லக்னோ:லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் உத்தர பிரதேசத்தில் அக்கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் புது பார்முலா தெரிவித்தார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில், ‘அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேசத்தில் பாஜக தோற்றால் மட்டுமே பாஜகவை நாட்டை விட்டு வெளியேற்ற முடியும். மாநிலத்தின் 80 ெதாகுதிகளையும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். ஆளும் பாஜக அரசு ஜனநாயகத்துக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானது. ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி கிடைக்காது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு பாஜகவிடம் பதில் இல்லை. ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பிரச்னை எழவில்லை. லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவை தோற்கடிக்குமா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. பாஜகவை அகற்றுவதன் மூலம் தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அகற்றப்பட வேண்டும். லோக்சபா தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி பாஜகவை தோற்கடிக்கும்’ என்றார்.

The post லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த உத்தரபிரதேசத்தில் தோற்கடிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் புது பார்முலா appeared first on Dinakaran.

Related Stories: